Published on Jul 29, 2024
Current Affairs
மின்சார வாகனங்கள் ஊக்குவிப்புத் திட்டம் -2024
மின்சார வாகனங்கள் ஊக்குவிப்புத் திட்டம் -2024
  • கனரகத் தொழில்துறை அமைச்சகம் ஆனது, 2024 ஆம் ஆண்டு மின்சார வாகனங்கள்ஊக்குவிப்பு திட்டத்தினை (EMPS 2024) மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.
  • இதற்கு கூடுதலாக 278 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. EMPS ஆனது 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதியன்று 500 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்டது.
  • மார்ச் மாதத்தில் FAME || திட்டம் காலாவதியானதைத் தொடர்ந்து, EMPS திட்டமானது ஆரம்பத்தில் நான்கு மாதங்களுக்கு மட்டுமே மேற்கொள்ளப்படுவதற்குத் திட்டமிடப் பட்டது.
  • இந்தத் திட்டம் ஆனது தற்போது 5 லட்சத்துக்கும் அதிகமான மின்சார இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும், சுமார் 61,000 மூன்று சக்கர மின்சார வாகன ஓட்டிகளுக்கும் மானிய உதவி வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளது.
  •