- தேசியக் குற்றப் பதிவு வாரியம் ஆனது (NCRB) இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் இணைய வெளிக் குற்றங்கள் சுமார் 24.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
- இணையவெளிக் குற்றங்களின் கீழ் மொத்தம் 65,893 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில் இது 2021 ஆம் ஆண்டில் பதிவானதை விட (52,974 வழக்குகள்) 24.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
- பெங்களூரு மாநகரமானது, 22.6 சதவீத குற்றப் பத்திரிகை விகிதத்துடன் 2022 ஆம் ஆண்டில் 9940 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளதுடன் பெருநகரங்களில் (2020-2022) அதிக எண்ணிக்கையிலான இணைய வெளிக் குற்றங்கள் பதிவாகியுள்ள நகரமாகத் திகழ்கிறது.
- இதைத் தொடர்ந்து அதே காலக் கட்டத்தில் இது மும்பையில் சுமார் 4724 ஆகவும், ஐதராபாத்தில் 4436 ஆகவும், புது டெல்லியில் 685 ஆகவும் இணைய வெளிக் குற்றங்கள் பதிவாகியுள்ளன.