Published on Dec 19, 2024
Current Affairs
முதல் பசுமை எஃகு உற்பத்தி வகைபிரித்தல்
முதல் பசுமை எஃகு உற்பத்தி வகைபிரித்தல்
  • எஃகுத் தொழில் துறையினை கார்பன் நீக்கம் செய்வதனை நோக்கமாகக் கொண்ட உலகின் முதல் பசுமை எஃகு உற்பத்தி வகைப் பிரிப்பு முறையை இந்தியா அறிமுகப் படுத்தியுள்ளது.
  • 2070 ஆம் ஆண்டிற்குள் இந்திய நாட்டின் நிகர சுழிய உமிழ்வு இலக்குகளை ஆதரிக்கும் வகையில், பசுமை எஃகு உற்பத்தி தரங்களை வகைப் பிரித்தல் வரையறுக்கிறது. இந்த வகைபிரித்தல் ஆனது, உமிழ்வினுடைய தீவிரத்தின் அடிப்படையில் பசுமை எஃகு உற்பத்தியினை வகைப்படுத்துவதற்கு என்று ஒரு நட்சத்திர-மதிப்பீட்டு முறையை அறிமுகப் படுத்துகிறது. ஐந்து நட்சத்திரப் பசுமை எஃகு என்ற ஒரு தரம் வழங்கப்படுவதற்கு, உற்பத்தி நிறைவு செய்யப் பட்ட ஒரு டன் எஃகுக்கு (tCO2/tfs) 1.6 டன்களுக்குக் குறைவான CO2 உமிழ்வு ஆக இருக்க வேண்டும்.
  •  சுமார் 2.2 tCO₂/tfsக்கும் குறைவான உமிழ்வைக் கொண்ட பசுமை முறையிலான எஃகு உற்பத்தியானது இந்தச் சான்றிதழினைப் பெறுவதற்குத் தகுதி பெறும்.