Published on Sep 17, 2024
Current Affairs
மௌசம் திட்டம்
மௌசம் திட்டம்
  • இரண்டு ஆண்டுகளில் 2,000 கோடி ரூபாய் செலவில் 'மௌசம்' திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வளிமண்டல அறிவியல், வானிலை கண்காணிப்பு, வானிலை மாதிரி வடிவமைப்பு, முன்னறிவிப்பு மற்றும் மேலாண்மை ஆகியவற்றில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் திறனை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
  • புவி அறிவியல் அமைச்சகத்தின் மூன்று நிறுவனங்களைப் பின்பற்றி முதன்மையாக மெளசம் திட்டம் செயல்படுத்தப்படும்.
  1. இந்திய வானிலை ஆய்வு மையம்,
  2. இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு கல்வி நிறுவனம், மற்றும்
  3. தேசிய நடுத்தரத் தொலைவு வரம்பிலான வானிலை முன்னறிவிப்பு மையம்.