Published on Jul 10, 2024
Current Affairs
மிகவும் சக்திவாய்ந்த அணு சக்தி சாராத வெடிகுண்டு SEBEX 2
மிகவும் சக்திவாய்ந்த அணு சக்தி சாராத வெடிகுண்டு SEBEX 2
  • இந்தியக் கடற்படையானது தனது வழக்கமான TNT (ட்ரைநைட்ரோடொலுவீன்) என்ற வெடிகுண்டினை விட இரண்டு மடங்கு அதிகமான ஆபத்தான புதிய வெடிபொருளைவெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.
  •  SEBEX 2 என்ற இந்தப் புதிய வெடிபொருளை நாக்பூரைச் சேர்ந்த சோலார் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
  • இது தற்போது மிகவும் சக்திவாய்ந்த அணுசக்தி சாராத வெடிபொருட்களில் ஒன்று ஆகும்.
  • SEBEX 2 என்பது தற்போது கிடைக்கக்கூடிய எந்தவொரு திடமான வெடிபொருளையும் விட மிகவும் சக்திவாய்ந்த வெடிப்பு விளைவை கொண்ட ஒரு புதிய வெடி மருந்து உருவாக்கம் ஆகும்.
  • இந்தியக் கடற்படையானது EEL நிறுவனத்தின் SITBEX 1 என்ற வெடி மருந்தினை முதல் தெர்மோபரிக் (தீப்பற்றுதலினால் வெளிப்புறத்திலிருந்து ஆக்சிஜனை உள்ளிழுத்து மாபெரும் தீப்பிழம்பினை உருவாக்கும்) வெடிமருந்து என சான்றளித்துள்ளது.
  • கடுமையான வெப்பத்துடன் கூடிய மிகவும் நீண்ட நேர வெடிப்பு விளைவினை உருவாக்குகின்ற SITBEX 1 ஆனது எதிரி நாட்டுப் படை வீரர்களின் பதுங்கு குழிகள், சுரங்கங்கள் மற்றும் பிற கவசமிடப்பட்ட இடங்களைக் குறி வைத்து தாக்க ஏற்றது.