Published on Dec 22, 2024
Current Affairs
மக்களைத் தேடி மருத்துவம் 2024
மக்களைத் தேடி மருத்துவம் 2024
  • தமிழ்நாடு மாநில அரசின் மிகவும் முதன்மை சுகாதாரத் திட்டமான மக்களைத் தேடி மருத்துவம் (MTM) ஆனது, இரண்டு கோடி மக்களுக்குப் பயனளித்துள்ளது.
  • இந்தத் திட்டம் ஆனது, மாநிலம் முழுவதும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்களுக்கு விரிவான வீடு தேடி சேவை வழங்கீடு அடிப்படையிலான சுகாதாரச் சேவைகளை வழங்குகிறது.
  • இது 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 05 ஆம் தேதியன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப் பட்டதோடு இது 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குப் பயனளிக்கிறது. இதில் நோயாளிகளுக்கு உடலியக்க மருத்துவச் சிகிச்சையும் வழங்கப்படுகிறது. இத்திட்டம் ஆனது மாநிலத்தில் 8,713 சுகாதார துணை மையங்களுடன் 385 கிராமப்புற தொகுதிகளுக்கும், 460 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுடன் சேர்த்து 21 மாநகராட்சிகளுக்கும் சேவையினை வழங்கி வருகிறது.
  • இத்திட்டத்திற்காக, தமிழக மாநிலத்தின் சுகாதாரத் துறைக்கு 2024 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் முகமைகளுக்கு இடையிலான பணிக்குழு விருதானது வழங்கப் பட்டுள்ளது.