- பல்லுயிர்ப் பெருக்கம் மற்றும் பெரும் சுற்றுச்சூழல் சேவைகளுக்கான அரசுகளுக்கு இடையேயான அமைப்பானது (IPBES) 2024 ஆம் ஆண்டு ப்ளூ பிளானட் பரிசைப் பெற்ற இரு அமைப்புகளுள் ஒன்றாகும்.
- இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் உலகளாவிய செழுமைக்கான கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த இராபர்ட் கோஸ்டான்சா விருதினைப் பெற்ற மற்றொரு நபர் ஆவார்.
- IPBES என்பது 2012 ஆம் ஆண்டில் பனாமா நகரில் நிறுவப்பட்ட அரசுகளுக்கு இடையே ஆன ஒரு அமைப்பாகும்.
- இது பல்லுயிர்களின் வளங்காப்பு மற்றும் அவற்றின் நிலையான பயன்பாட்டிற்காகப் பல்லுயிர் பெருக்கம் மற்றும் சுற்றுச்சூழல் சேவைகளுக்கான அறிவியல்-கொள்கை இடைமுகத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு அமைப்பாகும்.ப்ளூ பிளானட் பரிசு ஆனது ஜப்பானின் அசாஹி கிளாஸ் அறக்கட்டளையால் ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது.
- உலகளாவிய சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க உதவிய அறிவியல் ஆராய்ச்சி மற்றும் அதன் பயன்பாட்டில் மேற்கொள்ளப்படும் சிறந்தச் சாதனைகளை அங்கீகரிக்க தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இது வழங்கப்படுகிறது