Published on Oct 18, 2024
Current Affairs
பாலினத்திற்கு ஏற்றப் பருவநிலைக் கொள்கைகள்
பாலினத்திற்கு ஏற்றப் பருவநிலைக் கொள்கைகள்
  • உலகளவில் பாலினத்திற்கு ஏற்ற பருவநிலை கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது.
  • பாரீஸ் உடன்படிக்கையின் 81 சதவீத ஒப்பந்தத் தரப்பினர் அவற்றின் தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்டப் பங்களிப்புகளில் (NDC) பாலினம் சார்ந்த பல நடவடிக்கைகளைக் குறிப்பிட்டுள்ளனர்.
  • இன்று வரை, 195 ஒப்பந்ததாரர்களின் மொத்த NDC பங்களிப்புகளின் எண்ணிக்கை 168 ஆக இருந்தது.
  • * 62.3 சதவீத நாடுகள் அனைத்துப் பருவநிலை நடவடிக்கைகளிலும் பாலினத்தினைக் கருத்தில் கொள்வதை நெறிப்படுத்துவதற்கான நிறுவனம் சார்ந்த வழிமுறைகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை முன் வைத்துள்ளன. * 11.5 சதவீத நாடுகள், தகவமைப்பு நடவடிக்கையின் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டை ஆதரிப்பதில் ஈடுபட்டுள்ள பாலினச் சமச்சீர் குழுக்களை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட முன்னெடுப்புகளை முன் வைத்துள்ளன. சுமார் 55.7 சதவீத நாடுகள் பாலினச் சமத்துவத்திற்கான தங்கள் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளன. பிராந்தியத்தைப் பொறுத்து, வளர்ந்து வரும் நாடுகளின் ஒட்டு மொத்த உணவு உற்பத்தியில் பெண் விவசாயிகள் தற்போது 45-80 சதவீதப் பங்கினைக் கொண்டு உள்ளனர்.
  • வளர்ந்து வரும் நாடுகளில் பெண் தொழிலாளர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் மற்றும் பல ஆப்பிரிக்க நாடுகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் பல வேளாண் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.