பேறுகால தாய்மார்கள் இறப்பு வீதத்தினைக் குறைக்க புதிய செயற்குழு
தமிழ்நாடு அரசானது, பேறுகால தாய்மார்கள் இறப்புகளைக் குறைப்பதற்காக மாநில அளவிலான செயற்குழுவை அமைத்துள்ளது.
மேலும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தாய்மார்கள் இறப்பு விகிதத்தை (MMR) ஒரு லட்சத்துக்கு 10க்கும் குறைவாகக் குறைப்பதே இதன் நோக்கமாகும்.
தற்போது MMR ஆனது ஒரு லட்சம் பிறப்புகளுக்கு 45.5 ஆக உள்ளது. இந்த செயற்குழுவானது நிபுணர்கள் மற்றும் இந்திய மருத்துவ சங்கம், உலக சுகாதார அமைப்பு மற்றும் UNICEF ஆகியவற்றின் பிரதிநிதிகளை உள்ளடக்கும்.