Published on Nov 19, 2024
Current Affairs
பரவலாக்கப்பட்ட பசுமை ஹைட்ரஜன் முன்னெடுப்பு
பரவலாக்கப்பட்ட பசுமை ஹைட்ரஜன் முன்னெடுப்பு
  • பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்கான முன்னோடித் திட்டங்களை செயல்படுத்துவதற்காக 200 கோடி ரூபாய் திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது.
  • இது குடியிருப்பு, வணிக, உள்ளூர்ச் சமூகம், பரவலாக்கப்பட்ட அல்லது வழக்கத்திற்கு மாறான பயன்பாடுகளில் பெரும் புதுமையான முறைகள் அல்லது வழிமுறைகளைப் பயன்படுத்தும்".
  • இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் சூரிய சக்தி அடிப்படையிலான மிதக்கும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலை, உயிரி பொருள் சார்ந்த பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலை மற்றும் கழிவுநீரில் இருந்து பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி ஆலை ஆகியவை அடங்கும்.
  • பசுமை ஹைட்ரஜனின் பரவலாக்கப்பட்ட பயன்பாடு ஆனது சமையல், வெப்பமாக்கல், பொது மின் விநியோகக் கட்டமைப்பு சாராத மின்சார உற்பத்தி அல்லது சாலைப் பயன்பாடு சாராத வாகனங்களை இயக்குதல் ஆகியவை அடங்கும்.