Published on Sep 24, 2024
Current Affairs
பாரதிய அந்தரிக்ஸ் நிலையம்
பாரதிய அந்தரிக்ஸ் நிலையம்
  • ககன்யான் திட்டத்தின் நோக்கெல்லையினை விரிவுபடுத்துவதன் மூலம் பாரதிய அந்தரிக்ஸ் நிலையத்தின் முதல் பிரிவைக் கட்டமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.  
  • இந்தியா 2035 ஆம் ஆண்டிற்குள் செயல்பாட்டு நிலையில் உள்ள பாரதிய அந்தரிக்ஸ் நிலையத்தையும், 2040 ஆம் ஆண்டிற்குள் இந்திய விண்வெளி வீரர்கள் அடங்கிய நிலவுப் பயணத் திட்டத்தினையும் உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் விண்வெளி நிலையத்தின் முதல் தொகுதியானது, பாரதிய அந்தரிக்ஸ் நிலையம் (BAS-1) என்று அழைக்கப்படுகிறது. இது 2028 ஆம் ஆண்டில் அதன் முதல் தொகுதியுடன் தொடங்கப்பட உள்ளது. * 2000 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் ISS ஆனது NASA, Roscosmos, ESA, JAXA மற்றும் CSA ஆகியவற்றின் கூட்டு முன்னெடுப்பாகும். * "விண்ணுலக அரண்மனை" என்று பொருள்படும் சீனாவின் டியாங்காங், 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அதன் செயல்பாடுகளைத் தொடங்கியது.
  • ரஷ்யா தனது சொந்த நிலையமான ரஷ்ய சுற்றுப்பாதை விண் நிலையத்தை (ROS) உருவாக்கத் திட்டமிட்டுள்ளது.