Published on Oct 9, 2024
Current Affairs
பிரதான் மந்திரி உள்ளிருப்புப் பயிற்சி திட்டம்
பிரதான் மந்திரி உள்ளிருப்புப் பயிற்சி திட்டம்
  • பிரதான் மந்திரி உள்ளிருப்புப் பயிற்சி திட்டம் ஆனது, அக்டோபர் 03 ஆம் தேதியன்று தொடங்கப்பட்டது.
  • இந்தத் திட்டம் ஆனது அடுத்த ஐந்து ஆண்டுகளில் 500 முன்னணி நிறுவனங்களில் ஒரு கோடி இளையோர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதை முக்கிய நோக்கமாக கொண்டு ள்ளது.
  • இது நடப்புலக வணிகச் சூழல் குறித்த புரிதலை வழங்குவதன் மூலம் இந்தியாவில் இளையோர்களுக்கு வேலைவாய்ப்பை மேம்படுத்தும்.  இது இளையோர்களுக்கு வேலையில் பயிற்சி அளிப்பது மற்றும் நடப்புலக வேலைச் சூழலை வெளிப்படுத்துவதற்கான திட்டம் ஆகும். DBT (நேரடிப் பயன் பரிமாற்றம்) மூலம் மத்திய அரசிடமிருந்துப் பயிற்சியாளர்களுக்கு நிறுவனத்தின் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நிதியினால் வழங்கப்படும் கூடுதல் 500 ரூபாய் ஈட்டுத் தொகையுடன், மாதாந்திர உதவித் தொகையாக 4,500 ரூபாய் வழங்கப்படும்.
  • முழுநேர வேலையில் ஈடுபடாத 21 முதல் 24 வயதுக்குட்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்த ஓராண்டு காலப் பயிற்சித் திட்டத்திற்குத் தகுதியுடையவர்கள் ஆவர்.