Published on Sep 18, 2024
Current Affairs
போர்ட் பிளேர் தீவின் பெயர் மாற்றம்
போர்ட் பிளேர் தீவின் பெயர் மாற்றம்
  • அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேர் இனி 'ஸ்ரீ விஜய புரம்' என அழைக்கப்படும்.
  • போர்ட் பிளேர் நகரம் ஆனது அந்தமான் நிக்கோபார் தீவுகளின் நுழைவுப் பகுதி ஆகும். இது கிழக்கிந்தியக் கம்பெனியின் பம்பாய் கடற்படையில் (மரைன்) பணியாற்றியக் கடற்படை அளவையாளர் மற்றும் லெப்டினன்ட் ஆர்க்கிபால்ட் பிளேயர் என்பவரின் நினைவாக இதற்கு இப்பெயரிடப்பட்டுள்ளது.
  • * அந்தமான் தீவுகளை முழுமையான அளவில் நில அளவை ஆய்வு செய்த முதலாவது அதிகாரி பிளேயர் ஆவார். 1771 ஆம் ஆண்டில் பாம்பே மரைனில் தாம் சேர்ந்த பிறகு, பிளேயர் அடுத்த ஆண்டில் இந்தியா, ஈரான் மற்றும் அரேபியாவின் கடற்கரைகளில் நில அளவைப் பணியை மேற் கொண்டார். 1778 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், எலிசபெத் மற்றும் வைப்பர் ஆகிய இரண்டு கப்பல்களுடன் கல்கத்தாவிலிருந்து அந்தமானுக்கு தனது முதல் நில அளவை ஆய்வுப் பயணத்திற்கு பிளேயர் புறப்பட்டார். அந்தமான் தீவுகள் 11 ஆம் நூற்றாண்டின் சோழப் பேரரசர் முதலாம் இராஜேந்திரனால் ஓர் உத்திசார் கடற்படை தளமாக பயன்படுத்தப்பட்டதாக சில வரலாற்றுப் பதிவுகள் தெரிவிக்கின்றன.
  • * இன்றைய இந்தோனேசியாவில் இருக்கும் ஸ்ரீவிஜயா மீது தாக்குதல் நடத்த இது பயன் படுத்தப்பட்டது. தஞ்சாவூரில் கி.பி.1050 தேதியிட்ட கல்வெட்டின் படி, சோழர்கள் இத்தீவை மா-நகவரம் நிலம் என்று குறிப்பிட்டனர் என்பதோடு இது ஆங்கிலேயர்களால் நிக்கோபார் என்ற நவீன பெயரை இட வழிவகுத்தது.