Verify it's really you

Please re-enter your password to continue with this action.

Published on Sep 15, 2024
Current Affairs
பூமியின் மூன்றாவது ஆற்றல் புலம் - துருவக் காற்று
பூமியின் மூன்றாவது ஆற்றல் புலம் - துருவக் காற்று
  • 'துருவக் காற்று' எனப்படும் பூமியின் மூன்றாவது ஆற்றல் புலமான எதிரெதிர் துருவ நிகழ்வு - ஆம்பிபோலார் ஆனது இதுவரை கோட்பாட்டளவில் மட்டுமே இருந்தது.
  • 60 ஆண்டுகால ஆராய்ச்சிக்குப் பிறகு தற்போது இது நாசாவால் கண்டுபிடிக்கப் பட்டு உள்ளது. வட மற்றும் தென் துருவங்களுக்கு மேல் உள்ள பகுதிகளில் பூமியின் வளிமண்டலம் எவ்வாறு வேகமாக ஆவியாகிறது என்பதற்கான முக்கியமானப் பதில்களை துருவக் காற்று கொண்டுள்ளது.
  • ஆம்பிபோலார் புலம் இது வளிமண்டல துகள்களை விண்வெளிக்கு உயர்த்துகின்ற ஒரு கொணர்வுப் பட்டை போன்று செயல்படுகிறது. நமது வளிமண்டலத்தினைப் பேணுவதற்கு ஈர்ப்பு புலம் காரணமாக உள்ளது என்ற ஒரு நிலையில் போதுமான ஈர்ப்பு விசை இல்லை என்றால் அது விண்வெளியைச் சென்று அடைந்து விடும்.
  • காந்தப்புலம் என்பது பூமியை சூரியக் காற்றில் இருந்து பாதுகாக்கும் ஒரு கவசமாகும் என்பதோடு இது சூரியனால் வெளியிடப்படும் மின்னூட்டம் பெற்ற துகள்களின் பாய்வு ஆகும். ஆம்பிபோலார் புலம் என்பது ஈர்ப்பு விசையை எதிர்த்து, துகள்களை விண்வெளியில் வெளியேற்றுகிறது.