பூமியின் உள் கருவத்தின் சுழற்சியின் வேகத்தில் தொய்வு
சமீபத்திய ஆய்வுகள், 2010 ஆம் ஆண்டு முதல் பூமியின் மேற்பரப்புடன் ஒப்பிடச் செய்கையில், அதன் உள் கருவத்தின் சுழற்சியின் வேகம் குறையத் தொடங்கியதாக குறிப்பிடுகின்றன.
உட்கருவத்தின் வேகம் குறைவதால் பூமியில் ஒரு நாளின் நேர அளவானது ஒரு நொடி என்ற அளவின் வீதத்தில் மாறக்கூடும்.
பூமியின் உள் கருவமானது, இரும்பு மற்றும் நிக்கல் ஆகியவற்றால் ஆன, திரவ வெளிப்புற கருவத்திற்குள் (உருகிய உலோகங்களால் ஆனது) காணப்படும், ஈர்ப்பு விசையால் அதன் இடத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ள ஒரு திடமான கோளமாகும்.