Published on Sep 15, 2024
Current Affairs
புதிய மஞ்சள் இனங்கள்
புதிய மஞ்சள் இனங்கள்
  • நாகாலாந்து மாநிலத்தில் குர்குமா யுங்மென்சிஸ் எனப்படும் மஞ்சளின் புதிய 'சார்பு இனத்தினை' ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
  • இது குர்குமா (இஞ்சி குடும்பம் ஜிங்ஜிபெரேசி) இனத்தைச் சேர்ந்தது. இந்தியாவில் ஜிங்ஜிபெரேசி குடும்பமானது சுமார் 21 வகைகளையும் சுமார் 200 வகைப்பாட்டியலையும் கொண்டுள்ளது. குர்குமா இந்த தாவரக் குடும்பத்தின் மிக முக்கியமான மற்றும் பெரிய வகைகளில் ஒன்றாகும்.
  • * குர்குமா லாங்கா, கருப்பு மஞ்சள் (குர்குமா சீசியா) மற்றும் மா இஞ்சி (குர்குமா அமடா) ஆகியவை நன்கு அறியப்பட்ட மஞ்சள் இனங்களாகும். இந்தியாவில், குர்குமா இனமானது சுமார் 40 இனங்களால் குறிப்பிடப்படுகிறது.
  • அவை மிகவும் முக்கியமாக வடகிழக்கு மற்றும் தென் மாநிலங்களிலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் காணப்படுகின்றன.