Published on Nov 17, 2024
Current Affairs
புதிய நீர் மாசுபாடு அபராத விதிகள் 2024
புதிய நீர் மாசுபாடு அபராத விதிகள் 2024
  • மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆனது 1974 ஆம் ஆண்டு நீர் (மாசுத் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டத்தை மீறுதல் குறித்த விசாரணைகளை நடத்துவதற்கும் அபராதம் விதிப்பதற்குமான புதிய விதிகளை அறிவித்துள்ளது.
  • நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) (விசாரணை நடத்தும் முறை மற்றும் அபராதம் விதித்தல்) விதிகள், 2024 எனப்படுகின்ற இந்தப் புதிய விதிகள் ஆனது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
  • * சமீபத்திய இந்தத் திருத்தத்தின்படி, இந்தச் சட்டம் தொடடர்பான குற்றங்கள் மற்றும் இந்தச் சட்டத்தின் மீறல்கள் தண்டனைக்குரிய குற்றமற்றவை என்று குறிப்பிடப்பட்டு, அதற்குப் பதிலாக அபராதம் விதிக்கப்பட்டது. மாசுபாடு ஏற்படுத்தாத 'வெள்ளை' வகை தொழிற்துறைகளுக்கு முன் அனுமதி பெற வேண்டும் என்ற விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
  • * பல குற்றங்கள், மீறல்கள் தொடர்பான வழக்குகளைத் தீர்ப்பதற்கும், தண்டனைகளை நிர்ணயிப்பதற்கும் அதிகாரிகளை நியமிக்க மத்திய அரசிற்கு அதிகாரம் அளித்தது.
  • * மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள், மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு குழுக்கள் ஆகியவையும் இதில் ஈடுபடும்.
  • * தீர்ப்பளிக்கும் அதிகாரிக்கு, குற்றஞ்சாட்டப்பட்ட அல்லது விதி மீறலின் தன்மையை விவரித்துப் புகார்கள் பதிவு செய்யப்பட்ட நபர்களுக்கு அறிக்கை அனுப்ப அதிகாரம் உள்ளது. விதி மீறல் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள், தனக்காக வாதிடலாம் அல்லது ஒரு சட்டப் பிரதிநிதி மூலம் வாதிட முடியும்.
  • எதிர் தரப்பினருக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டதிலிருந்து ஆறு மாதங்களுக்குள் முழு விசாரணை செயல்முறையும் முடிக்கப்பட வேண்டும் என்று விதிகள் கூறுகின்றன.