Published on Jun 21, 2024
Current Affairs
புதிய தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் 2024
புதிய தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் 2024
  • தமிழ்நாடு மாநிலத் தொல்லியல் துறையானது கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் உட்பட தமிழகம் முழுவதும் எட்டு இடங்களில் தொல்லியல் அகழாய்வுகளை தொடங்கியுள்ளது.
  • இந்த ஆண்டு நான்கு புதிய இடங்களில் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கப் பட்டு உள்ளன.  சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வுப் பணிகளும், கொந்தகையில் ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.
  • மற்ற இடங்களாவன, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் 3வது கட்டம், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டியில் 2வது கட்டம், புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக் கோட்டையில் 2வது கட்டம் மற்றும் தென்காசி மாவட்டம் திருமால் புரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னூர், திருப்பூர் மாவட்டம் கொங்கல்நகரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் மருங்கூர் ஆகிய இடங்களில் முதல் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டன.