Published on Oct 8, 2024
Current Affairs
புதிய செம்மொழிகள்
புதிய செம்மொழிகள்
  • மராட்டியம், வங்காளம், பாலி, பிராகிருதம் மற்றும் அசாமியம் ஆகிய புதிய ஐந்து மொழிகளுக்கும் 'செம்மொழி' அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சரவையின் இந்த முடிவால், இந்த அந்தஸ்து பெற்ற மொழிகளின் எண்ணிக்கையானது ஆறில் இருந்து 11 ஆக (இரு மடங்காக) உயரும்.
  • இதற்கு முன்னதாக தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய மொழிகள் இந்த அந்தஸ்தினைப் பெற்றுள்ளன. 2004 ஆம் ஆண்டில் தமிழுக்கு தான் முதன்முதலில் செம்மொழி அந்தஸ்து வழங்கப் பட்ட நிலையில் 2014 ஆம் ஆண்டில் ஒடியா மொழிக்குத் தான் கடைசியாக செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது.
  •  புதியதாக செம்மொழி அந்தஸ்து பெறும் இந்த மொழிகளுக்கென தேசிய விருதுகள், பல்கலைக் கழகங்களில் சிறப்புப் பிரிவுகள் (இருக்கைகள்) மற்றும் மேம்பாட்டு மையங்கள் ஆகியவை உரிய காலத்தில் அமைக்கப்படும்.