போதைப் பொருள் குற்றங்கள் குறித்த புகாருக்கான கட்டணமில்லாத தொலை பேசி உதவி எண் -1933
முதன்முறையாக மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்ட தேசிய கட்டணமில்லாத தொலை பேசி உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
MANAS (தேசிய போதைப் பொருள் உதவிச் சேவைக்கான) கட்டணமில்லா உதவி எண் 1933 மற்றும் மின்னஞ்சல் முகவரி info.ncbmanas@gov.in ஆகும்.போதைப் பொருள் குற்றங்கள் மற்றும் அது தொடர்பானப் பிரச்சினைகள் குறித்து போதைப் பொருள் கட்டுப்பாட்டு வாரியத்திற்குத் தகவல் தெரிவிக்க இது உதவும்.
MANAS என்பது 'மதக் பதார்த் நிசேத் அசுச்னா கேந்திரா அல்லது போதைப் பொருள் தடுப்பு தகவலளிப்பு மையம் என்பதைக் குறிக்கிறது.