Published on Aug 29, 2024
Current Affairs
பாதுகாப்பு உபகரண வழங்கீடுகளின் பாதுகாப்பிற்காக இந்தியா அமெரிக்க ஒப்பந்தம்
பாதுகாப்பு உபகரண வழங்கீடுகளின் பாதுகாப்பிற்காக இந்தியா அமெரிக்க ஒப்பந்தம்
  • இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆனது புதிய பாதுகாப்பு உபகரண வழங்கீடுகளின் பாதுகாப்புச் செயல்முறையில (SOSA) கையெழுத்திட்டுள்ளன.
  • இந்த ஒப்பந்தமானது அவசர தேசிய பாதுகாப்பு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கூறுகளை பரஸ்பரம் மாறிக் கொள்வதற்கு ஒரு முன்னுரிமை அளிக்கும்.
  • இந்த ஒப்பந்தம், சட்டப் பூர்வமாகப் பிணைக்காவிட்டாலும், இந்திய மற்றும் அமெரிக்க நிறுவனங்களுக்கு இடையேயான முதலீடுகள் மற்றும் கூட்டாண்மைக்கான புதிய வாய்ப்புகளை வழங்கும். இந்தியா மற்றும் அமெரிக்கா பரஸ்பரப் பாதுகாப்பு கொள்முதல் ஒப்பந்தம் (RDP) என்ற மற்றொரு ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தையை மேற்கொண்டுள்ளன.
  • இது இந்திய உற்பத்தியாளர்கள் அமெரிக்க பாதுகாப்பு நிறுவனங்களுடன் இணைந்து   செயல்படுவதற்கான வாய்ப்புகளைப் பெருமளவில் அதிகரிக்கும். * RDP இறுதி செய்யப்பட்டவுடன், பாதுகாப்பு கூட்டு கையகப்படுத்துதல் வழங்கீட்டு ஒழுங்குமுறைக்கு (DFARS) இணங்கும் அந்தஸ்து பெற்ற 26 நாடுகளின் பட்டியலில் இந்தியா இணையும்.
  •  இந்த நாடுகள் மட்டுமே அமெரிக்க இராணுவ கொள்முதல் உத்தரவுகளுக்கு குறிப்பிடத் தக்க கூறுகள் மற்றும் பாகங்களை வழங்க தகுதி பெற்றுள்ளன.