Verify it's really you

Please re-enter your password to continue with this action.

Published on May 28, 2024
Current Affairs
படிவம் 17C
படிவம் 17C
  • நடந்து வரும் மக்களவைத் தேர்தலின்போது வாக்குச் சாவடிகள் வாரியான வாக்காளர்களின் எண்ணிக்கை விவரங்களைப் பதிவேற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு (EC) உத்தரவிட வேண்டும் என்ற ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் (ADR) கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
  • * வேட்பாளர் அல்லது அவர்களின் முகவரைத் தவிர வேறு எவருக்கும் 17C படிவத்தினை வழங்க சட்டப்பூர்வ அதிகாரம் எதுவும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
  • 1961 ஆம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிகளின் கீழான படிவம் 17C, கீழ்க்காணும் பல தரவுகளை பதிவு செய்கிறது,
  • ஒவ்வொரு சாவடிக்கும் நியமிக்கப்பட்டுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை ஒரு பகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை வாக்களிக்க வேண்டாம் என்று முடிவு செய்த வாக்காளர்களின் எண்ணிக்கை வாக்களிக்க அனுமதிக்கப்படாத வாக்காளர்களின் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை (மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் இருந்து பெறப்பட்ட தரவு)
  • பதிவான வாக்குகளின் எண்ணிக்கையானது வாக்களிக்காதவர்களின் எண்ணிக்கையினைக் கழித்த பிறகு பெறப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கைக்குச் சமமாக இருப்பதைக் குறித்தல் வாக்குச் சீட்டுகள் பற்றிய தரவு (பெறப்பட்டது, வழங்கப்பட்டது மற்றும் பயன்படுத்தப் படாதது/திரும்பப் பெறப்பட்டவை)  வாக்கு முத்திரைகள் பற்றிய தரவுகள் (வழங்கப்பட்ட/பயன்படுத்தப்பட்ட/திரும்பப் பெறப்பட்டவை).