Verify it's really you

Please re-enter your password to continue with this action.

Published on May 17, 2024
Current Affairs
போட்டியிடும் இடங்களுக்கான விதிகள்
போட்டியிடும் இடங்களுக்கான விதிகள்
  • 1951 ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (RPA) என்ற சட்டத்தின் படி ஒரு வேட்பாளர் தேர்தலில் போட்டியிட, இரண்டு தொகுதிகள் வரை அனுமதிக்கப்படுகிறார்.
  • ஆனால் அவர் ஒரே நேரத்தில் இரண்டு தொகுதிகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஒரு இடத்தை மட்டுமே தக்க வைத்துக் கொள்ள முடியும்.
  • ஒரு வேட்பாளரை இரண்டு இடங்களில் போட்டியிட அனுமதிக்கும் முறையானது 1996 ஆம் ஆண்டில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில், துணைப்பிரிவு 33 (7) என்ற ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டதன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன்பு, ஒரு வேட்பாளர் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்த வொரு தடையும் இருந்ததில்லை.
  • இருப்பினும், அதேச் சட்டத்தின் 70வது பிரிவு, ஒரு வேட்பாளர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், ஒரே நேரத்தில் ஒரு இடத்தை மட்டுமே பிரதிநிதித்துவம் செய்ய முடியும் என்று கூறுகிறது. எனவே, ஒரு வேட்பாளர் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றால், அவர்/அவள் பதவி விளக்கிய இடத்தில் இடைத்தேர்தல் நடத்துவது அவசியமாகும். மேலும், ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அவர் அந்த மாநிலத்தின் வாக்காளராக இருக்க வேண்டும்.
  • ஆனால் மக்களவைத் தேர்தலில் போட்டியிட, நாட்டின் எந்தவொரு தொகுதியிலும் வாக்காளராகப் பதிவு செய்திருக்கலாம்.
  • ஒருவர் ஏதேனும் ஒரு தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்காளராக இருந்தால், அவர் அசாம், லட்சத்தீவுகள் மற்றும் சிக்கிம் தவிர, இந்தியாவில் உள்ள எந்த தொகுதியிலும் போட்டியிடலாம்.