Published on Oct 12, 2024
Current Affairs
பஞ்சாரா விராசத் அருங்காட்சியகம் மகாராஷ்டிரா
பஞ்சாரா விராசத் அருங்காட்சியகம் மகாராஷ்டிரா
  • பஞ்சாரா சமூகத்தின் மிகவும் வளமான பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில் மகாராஷ்டிராவில் உள்ள வாஷிமில் போஹராதேவியில் பஞ்சாரா விராசத் என்ற ஒரு அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.
  • பஞ்சாரா சமூகம் என்பது இராஜஸ்தானைச் சேர்ந்த நாடோடி பழங்குடியினரின் குழு ஆகும் என்பதோடு அக்குழுவினர் தற்போது கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் குடியேறியுள்ளனர்.போஹராதேவி என்ற பகுதியானது இச் சமூகத்தினரால் மிகப் புனிதமான இடமாகக் கருதப் படுவதோடு அவர்கள் அந்தப் பகுதியினை "பஞ்சாரா சமூகத்தின் காசி" என்று குறிப்பிடுகிறார்கள்.
  • * பஞ்சாரா சமூகத்தினர் வரலாற்று ரீதியாக இந்தியாவின் உள்நாட்டுப் பகுதிகளில் கால்நடை வளர்ப்பவர்கள், வணிகர்கள், கால்நடை இனப்பெருக்குனர்கள் மற்றும் பொருட்களைக் கொண்டு செல்வோர் என்ற ரீதியில் காணப்படுகின்றனர்.