Published on Sep 13, 2024
Current Affairs
பசுமை ஹரியானா கொள்கை விளக்க அறிக்கை - 2024
பசுமை ஹரியானா கொள்கை விளக்க அறிக்கை - 2024
  • ஹரியானாவில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதற்காக முதல் முறையாக 'பசுமை அறிக்கை 2024' எனப்படும் ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளனர்.
  • * காற்று மாசுபாடு, கழிவு மேலாண்மை, நிலத்தடி நீர்மட்டம் குறைதல், ஆரவல்லி மலைத் தொடரைப் பாதுகாப்பதன் அவசியம் போன்ற பல்வேறு நெருக்கடி மிக்கப் பிரச்சினைகளை இது முன் வைக்கிறது.
  •  தேசியச் சராசரியான 21 சதவீதத்துடன் ஒப்பிடும் போது, 3.6% பங்குடன் இந்தியாவில் மிகக் குறைந்த அளவிலான வனப் பரவலைக் கொண்ட மாநிலமாக இது திகழ்கிறது.
  • மேலும், இந்த மாநிலம் உலகில் மிகவும் மாசுபட்ட 50 இடங்களில் எட்டு இடங்களைக் கொண்டுள்ளது.
  • பசுமை அறிக்கை 2024' என்ற அறிக்கையில் உள்ள முக்கிய கோரிக்கை: பூட் பகுதிகள் மற்றும் சிவாலிக் போன்றவை உள்ளிட்ட ஆரவல்லி மலைத் தொடரை 'முக்கியச் சுற்றுச்சூழல் மண்டலங்களாக' சட்டப் பூர்வமாக நியமிக்க வேண்டும். கடுமையான 1994 ஆம் ஆண்டு டெல்லி மரங்கள் பாதுகாப்புச் சட்டத்தினை போலவே ஹரியானாவிற்கு ஒரு 'மரப் பாதுகாப்புச் சட்டத்தை' இயற்ற வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கோரப் பட்டுள்ளது.