Published on Aug 25, 2024
Current Affairs
பசுமை எரிபொருள் சார் இழுவைப் படகுப் பயன்பாட்டிற்கு மாறுதல் திட்டம்
பசுமை எரிபொருள் சார் இழுவைப் படகுப் பயன்பாட்டிற்கு மாறுதல் திட்டம்
  • மத்தியத் துறைமுகக் கப்பல் மற்றும் நீர்வழித் துறை அமைச்சகம் ஆனது, பசுமை நுட்பம் சார் இழுவைப் படகுப் பயன்பாட்டிற்கு மாறுதல் திட்டத்திற்கான (GTTP) சீர் தர இயக்கச் செயல்முறையினை (SOP) அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. '
  • பஞ்ச் கர்ம சங்கல்ப்' திட்டத்தின் கீழ் ஒரு முக்கிய முயற்சியாக பசுமை நுட்பம் சார் இழுவைப் படகு பயன்பாட்டிற்கு மாறுதல் திட்டம் (GTTP) தொடங்கப்பட்டது. GTTP ஆனது இந்தியாவின் பெரிய துறைமுகங்களில் இயங்கும் வழக்கமான எரி பொருள் அடிப்படையிலான துறைமுக இழுவைப் படகுகளை அகற்றி, தூய்மையான மற்றும் நிலையான மாற்று எரிபொருளால் இயக்கப்படும் பசுமை எரிபொருள் சார் இழுவைப் படகுகளை மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • GTTP திட்டத்தின் முதல் கட்டம் ஆனது 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 01 ஆம் தேதியன்று தொடங்கப் பட்டு 2027 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும்.
  • இந்தக் கட்டத்தில் ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம், தீன்தயாள் துறைமுக ஆணையம், பாரதீப் துறைமுக ஆணையம் மற்றும் V.O. சிதம்பரனார் துறைமுகஆணையம் ஆகிய நான்கு முக்கியத் துறைமுகங்கள் ஆனது தலா இரண்டு பசுமை எரிபொருள் சார் இழுவைப் படகுகளையாவது கொள்முதல் செய்யும் அல்லது அதன் உரிமத்தினைப் பெறும்.