Verify it's really you

Please re-enter your password to continue with this action.

Published on Jul 20, 2024
Current Affairs
நிலையான மேம்பாட்டு இலக்குக் குறியீட்டில் தமிழ்நாட்டின் செயல்திறன் 2023-24
நிலையான மேம்பாட்டு இலக்குக் குறியீட்டில் தமிழ்நாட்டின் செயல்திறன் 2023-24
  • 2023-24 ஆம் ஆண்டு இந்தியாவின் நிலையான மேம்பாட்டு இலக்கு நிவர்த்திக் குறியீடானது 70 இலக்குகள் மற்றும் 113 குறிகாட்டிகளின் அடிப்படையில் இலக்குகளை அடைவதில் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் நிர்வாகச் செயல்திறனை பகுப்பாய்வு செய்துள்ளது.தமிழ்நாடு மாநிலமானது 78 என்ற கூட்டு மதிப்பெண்களுடன், 71 என்ற தேசிய சராசரியினை விஞ்சி மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • ஐக்கிய நாடுகள் சபையின் 13 நிலையான மேம்பாட்டு இலக்குகளில் (SDGs) தமிழ்நாடு 'முன்னணி மாநிலமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
  • இந்த அறிக்கையானது மாநிலங்களின் மதிப்பெண்களின் அடிப்படையில் அவற்றின்
  • செயல்திறன்களை 'இலட்சியமிகு மாநிலம்' (0-49), 'நடவடிக்கைகளை மேற்கொள்ளும்
  • மாநிலம்' (50-64), 'முன்னணியில் உள்ள மாநிலம்' (65-99) மற்றும் 'சாதனை மாநிலம்' (100) என வகைப்படுத்துகிறது.
  • தமிழ்நாடு மாநில அரசானது தனது முன்னணி இடத்தைத் தக்க வைத்துக் கொண்டு உள்ளது.
  • 2020-21 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட முந்தைய அறிக்கையில் தமிழகத்தின் கூட்டு மதிப்பெண் 74 ஆக இருந்தது.
  • மற்ற மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில், வறுமை ஒழிப்பு இலக்கில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
  • பல்பரிமாண வறுமைக் குறியீட்டின்படி, 14.96% என்ற தேசிய சராசரிக்கு எதிராக நமது மாநிலத்தின் செயல்திறன் 2,2% ஆக உள்ளது.
  • மாநிலத்தில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 22% மற்றும் 25% பேர் முறையே எடை குறைவாகவும் வளர்ச்சி குன்றியவர்களாகவும் இருப்பதாக அறிக்கை கூறுகிறது.ஒரு லட்சம் பிறப்புகளுக்கான பேறு காலத் தாய்மார்கள் இறப்பு விகிதம் மற்றும் 1,000 பிறப்புகளுக்கான ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் ஆகியவை முறையே 54 மற்றும் 13 ஆக உள்ளது.
  • சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் விகிதம் ஆனது ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 23.31 ஆக உள்ளது என்ற நிலையில் இது நாட்டிலேயே மிக அதிகமாகும்.
  • உயர்நிலை மற்றும் உயர்கல்வியில் மாணவர்களின் மொத்தச் சேர்க்கை விகிதமானது முறையே 81.5% மற்றும் 47% ஆக உள்ளது.
  • இதன் தேசிய சராசரி 57.6% மற்றும் 28.4% ஆகும்.
  • மேலும், தமிழ்நாட்டில் உள்ள 81.87% கிராமப்புறக் குடும்பங்கள் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீர் குழாய் இணைப்பு வசதியினைப் பெற்றுள்ளன.
  • நமது மாநிலத்தில் 15-59 வயதிற்குட்பட்டோர் மத்தியில் நிலவும் வேலைவாய்ப்பின்மை விகிதம் மற்றும் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் ஆகியவை முறையே 4.8% மற்றும் 62.3% ஆக உள்ளது.
  • சுமார் 92.8% குடும்பங்கள் குறைந்தபட்சம் ஒரு கைபேசியாவது வைத்திருக்கிறார்கள்.
  • ஆதார் மூலம் உள்ளடக்கப்பட்ட மக்கள் தொகையின் சதவீதம் 97.94 ஆகும்.
  • 7.2% ஆக இருந்த இந்த மாநிலத்தின் வேலைவாய்ப்பின்மை விகிதம் ஆனது 4.8% ஆக குறைந்துள்ளது.