Published on Oct 29, 2024
Current Affairs
நீரிழிவு நோய்க்கான திறன் மிகு இன்சுலின்
நீரிழிவு நோய்க்கான திறன் மிகு இன்சுலின்
  •  அறிவியலாளர்கள், ஒருவரின் இரத்த சர்க்கரை அளவின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப செயலாற்றுகின்ற ஒரு "திறன் மிகு" இன்சுலினை "அரிய" நீரிழிவு சிகிச்சைக்கு வேண்டி உருவாக்கியுள்ளனர்.
  •  புதிதாக உருவாக்கப்பட்ட NNC2215 ஆனது எலிகள் மற்றும் பன்றிகளில், இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவினை நன்கு குறைப்பதில் மனித இன்சுலினைப் போலவே செயல்படுகிறது.
  • இந்த இன்சுலின் செயலாற்றுவதற்கு என்று குறிப்பிடத்தக்க குளுக்கோஸ் தூண்டுதல் தேவைப் படுகிறது என்பதோடு அது செயல்படுத்தப் பட்டவுடன், இன்சுலின் அளவு திடீரென உயர்கிறது. பெரும்பாலும் குழந்தைப் பருவத்தில் தொடங்கும் முதல் வகை நீரிழிவு நோய் ஆனது, கணையம் இன்சுலின் (அல்லது போதுமான இன்சுலின்) உற்பத்தி செய்யாத போது ஏற்படுகிறது.
  • இரண்டாம் வகை நீரிழிவு நோயில், உடலின் செல்கள் இன்சுலின் எதிர்ப்பை வளர்த்துக் கொள்கிறது, அதாவது கணையத்தால் உற்பத்தி செய்யப்படுவதை விட அதிக அளவு தேவைப் படுகிறது.