Published on Sep 7, 2024
Current Affairs
நான் முதல்வன் - உயர்வுக்குப் படி திட்டம்
நான் முதல்வன் - உயர்வுக்குப் படி திட்டம்
  • தமிழக மாநில அரசானது, பன்னிரண்டாம் வகுப்பு மாணாக்கர்கள் மாநில வாரியத் தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்கல்வியைத் தொடர்வதை உறுதி செய்வதற்காக மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்களை நடத்தி வருகிறது.
  • நான் முதல்வன் திட்டத்தின் (உயர்வுக்குப் படி) கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் பள்ளி மாநிலத் திட்ட இயக்குநரகத்தினால் இந்தச் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும்.
  • மாநிலத்தில் உள்ள பொறியியல், பலதொழில் நுணுக்கப் பயிற்சி, கலை, அறிவியல் மற்றும் தொழிற்கல்வி கல்லூரிகளில் உயர்கல்வி பயிலப் பதிவு செய்யத் தவறிய மாணவர்களுக்காக இந்தச் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். கல்லூரிகளில் உள்ள காலியிடங்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் நேரடியாக மாணாக்கர் சேர்க்கையும் மேற்கொள்ளப்படும்.
  • 2022-23 ஆம் ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் 3,97,809 மாணாக்கர்களில், 2,39,270 மாணாக்கர்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர் மற்றும் 45,440 மாணாக்கர்கள் உயர்கல்வியினைப் பெற விண்ணப்பித்துள்ளனர்.
  • சுமார் 1,13,099 மாணாக்கர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பிக்கவில்லை அல்லது பதிவு செய்ததற்கான போதுமான விவரங்களை வழங்கவில்லை. 2023-2024 ஆம் ஆண்டில், பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் 3,31,540 மாணாக்கர்களில், 1,97,510 மாணாக்கர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பித்துள்ளனர்.
  • சுமார் 1,34,030 மாணாக்கர்கள் விண்ணப்பிக்கவில்லை அல்லது விண்ணப்பம் குறித்த போதுமான விவரங்களை வழங்கவில்லை.