Published on Oct 11, 2024
Current Affairs
நீக்ரோ நதி நீர்மட்டம்
நீக்ரோ நதி நீர்மட்டம்

அமேசான் ஆற்றின் முக்கிய துணை நதிகளில் ஒன்றான நீக்ரோ நதியின் நீர்மட்டம் ஆனது இதுவரை பதிவு செய்யப்படாத அளவிற்கு மிகவும் குறைந்துள்ளது.

மனௌஸ் என்ற துறைமுகத்தில் நீக்ரோ ஆற்றின் நதியின் நீர்மட்டம் சமீபத்தில் 12.66 மீட்டராக இருந்தது.

சுமார் 122 ஆண்டுகளுக்கு முன்பு அளவீடுகள் தொடங்கியதிலிருந்து பதிவான மிகக் குறைவான பதிவு இதுவாகும்.

நீக்ரோ நதி அமேசான் படுகையின் 10 சதவீதப் பகுதிகளுக்கு நீர் வழங்குகிறது, மேலும் நீர் கொள்ளளவின் அடிப்படையில் இது உலகின் ஆறாவது பெரிய நதியாகும். 2250 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த நதி கொலம்பியா, வெனிசுலா மற்றும் பிரேசில் வழியாகச் செல்கிறது.