Published on Oct 1, 2024
Current Affairs
தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம்
தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம்
  • மாறுநிலை அகவிலைப் படியை திருத்தி அமைத்ததன் மூலம் தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச ஊதிய விகிதங்களை ஒரு நாளைக்கு 1,035 ரூபாய் வரை உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • இந்தத் திருத்தத்திற்குப் பிறகு, கட்டுமானம், பெருக்குதல், துப்புரவுப் பணி, சரக்கு ஏற்றுதல் & இறக்குதல் ஆகியவற்றில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு 'A' பிரிவில் வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியம் ஒரு நாளைக்கு 783 ரூபாய் (மாதம் 20,358 ரூபாய்) ஆக இருக்கும். பகுதியளவு திறன் சார்ந்தத் தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்ச ஊதியம் என்பது ஒரு நாளைக்கு 868 (மாதத்திற்கு 22,568 ரூபாய்) ஆகும்.
  • * இதன்படி திறன் சார் தொழில், எழுத்தர் மற்றும் ஆயுதம் இல்லாத கண்காணிப்புப் பணியாளர்களுக்கு ஒரு நாளைக்கு 954 ரூபாய் ஆகும் (மாதத்திற்கு 24,804 ரூபாய்). * இதன்படி அதிகளவு திறன் சார்ந்த மற்றும் ஆயுதங்களைக் கொண்ட கண்காணிப்புப் பணியாளர்களுக்கான குறைந்த பட்ச ஊதிய விகிதம் ஒரு நாளைக்கு 1,035 ரூபாய் (மாதத்திற்கு 26,910 ரூபாய்) ஆகும். இந்தப் புதிய ஊதிய விகிதங்கள் ஆனது 2024 அம் ஆண்டு அக்டோபர் 01 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். கடைசியாக 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஊதிய திருத்தம் செய்யப்பட்டது.