Published on Jul 31, 2024
Current Affairs
தல்வார் ரகப் போர் கப்பல்
தல்வார் ரகப் போர் கப்பல்
  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'INS திரிபுட்' எனப்படும் முதல் தல்வார் ரகப் போர்க் கப்பலானது கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வலிமை மிக்க அம்பினைக் குறிக்கும் வகையில் இந்தக் கப்பலுக்கு திரிபுட் என்று பெயரிடப் பட்டுள்ளது.
  • இந்தப் போர்க்கப்பலில் பிரம்மோஸ் ஏவுகணைகள் மற்றும் ஷ்டில்-1 வான்வழிப் பாதுகாப்பு அமைப்பு ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இந்த வரிசையில் தயாரிக்கப்பட உள்ள இரண்டாவது கப்பலான தமால் 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் கட்டமைக்கப்படும்.
  • * இந்திய அரசானது, 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ரஷ்யாவிடம் இருந்து நான்கு போர்க் கப்பல்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டது என்ற நிலையில் அவற்றில் இரண்டு கப்பல்கள் ரஷ்யாவிலும் இரண்டு கப்பல்கள் கோவா கப்பல் கட்டும் தளத்திலும் கட்டமைக்கப் பட உள்ளன.