Published on Dec 29, 2024
Current Affairs
தமிழ்நாடு வேலைவாய்ப்பு வரைவுக் கொள்கை 2023
தமிழ்நாடு வேலைவாய்ப்பு வரைவுக் கொள்கை 2023
  • இது தற்போதைய தொழிலாளர் சந்தையில் உள்ள பல நெருக்கடியான  பிரச்சினைகளை நிவர்த்தி செய்கிறது. இவற்றில் நன்கு கல்வி பயின்ற இளைஞர்களிடையே பெருமளவில் நிலவும் மிகவும் அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்பின்மை விகிதம் மற்றும் கல்வி, திறன்கள், குறிக்கோள்கள் மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு இடையே உள்ள குறிப்பிடத்தக்கப் பொருத்தமின்மை ஆகியவை அடங்கும்.
  • மேலும், பொருத்தமான தீர்வுகளை உருவாக்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை இந்தக் கொள்கை குறிப்பிட்டுக் காட்டுகிறது. சராசரி வருமான அளவை உயர்த்தச் செய்வதற்கும் பொருளாதாரத்தின் வேகமான வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கும் என ஆக்கப்பூர்வ மிக்க வேலைவாய்ப்புகள் மற்றும் உள்ளார்ந்த வளர்ச்சிக்கான 10 ஆண்டு கால உத்தி முக்கியமானதாகும்.