Published on Jul 4, 2024
Current Affairs
தமிழ்நாடு விண்வெளி சார் தொழில் துறை கொள்கை, 2024 வரைவு அறிக்கை
தமிழ்நாடு விண்வெளி சார் தொழில் துறை கொள்கை, 2024 வரைவு அறிக்கை
  • 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு விண்வெளித் தொழில்துறைக் கொள்கையின் வரைவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
  • இது 10 ஆண்டுகளில் சுமார் 10,000 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் துறையில் உள்ள நபர்களுக்கு ஏராளமான சலுகைகளையும் வழங்க உள்ளதாகஇது உறுதியளித்தது.
  • விண்வெளித் துறை தொடர்பான உற்பத்தி மற்றும் சேவைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களுக்கும் இந்தக் கொள்கை பொருந்தும்.
  • மாநில அரசானது, திருச்சியில் TREAT எனப்படும் பொது மையத்தினை நிறுவுவதற்காக ஏற்கனவே தனியார் தொழில் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
  • இது விண்வெளித் துறையின் கனரகப் பொறியியல் தேவைகளைப் பூர்த்திச் செய்யும் திறன்களைக் கொண்டுள்ளது.