Published on Oct 2, 2024
Current Affairs
தமிழ்நாடு மாநில நாய் வளர்ப்பு கொள்கை, 2024
தமிழ்நாடு மாநில நாய் வளர்ப்பு கொள்கை, 2024
  • தமிழ்நாடு மாநில நாய் வளர்ப்புக் கொள்கை, 2024 ஆனது சமீபத்தில் வெளியிடப் பட்டது.
  • * இந்தியத் தட்பவெப்ப நிலையைத் தாங்க முடியாத நாய் இனங்களை வளர்ப்பதை இந்தக் கொள்கை தடை செய்கிறது. இது ஆரோக்கியம் மற்றும் நலன் கருதி இனப்பெருக்கம் தடை செய்யப்பட வேண்டிய குளிர் பருவநிலையில் வளரும் நாய்களின் பட்டியலில் பக் மற்றும் சோவ் சோவ் ஆகிய இனங்களையும் சேர்த்துள்ளது.
  • இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட்ட வரைவுக் கொள்கையானது, இந்த ஒன்பது நாய் இனங்களை மட்டுமே பட்டியலிட்டிருந்தாலும், இறுதி வரைவில் மேலும் இரண்டு இனங்கள் (பக் மற்றும் சோவ் சோவ்) சேர்க்கப்பட்டுள்ளன. * இறுதிக் கொள்கையில் இராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை, கன்னி ஆகியவை தமிழ்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட இனங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன.
  • கட்டை, இராமநாதபுரம் மண்டை, மலைப்பட்டி, செங்கோட்டை ஆகிய நாட்டு நாய்கள் அழிந்து விடாமல் தடுப்பதற்காக, அவை தரப்படுத்தப்பட்டு, அங்கீகாரம் பெற்று, பதிவு செய்யப்பட வேண்டும். இந்த மையங்களில் நாட்டு இனங்களின் இனப்பெருக்கத்தை ஊக்குவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று இந்த கொள்கை கூறுகிறது.
  • குறைந்த அளவே இடனம் உள்ள வீட்டில் நாட்டு நாய்களை வளர்க்க பரிந்துரைக்கப் பட மாட்டாது