Published on Jul 23, 2024
Current Affairs
தமிழ்நாடு தினம் 2024
தமிழ்நாடு தினம் 2024
  • 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, மதராஸ் மாகாணம் ஆனது மதராஸ் மாநிலமாக மாறியது.1956 ஆம் ஆண்டு மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டத்தின் விளைவாக மாநிலத்தின் எல்லைகள் மொழிவாரியாக மறுசீரமைக்கப்பட்டன.
  • தமிழ்நாடு மாநிலமானது 1956 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் தேதியன்று மதராஸ் மாநிலம் என்ற பெயரில் உருவாக்கப் பட்டது.
  • 1967 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதியன்று, அப்போதைய மதராஸ் மாகாணத்தின் பெயரை தமிழ்நாடு என மாற்றுவதற்காக வேண்டி முன்னாள் முதல்வர் C.N. அண்ணா துரை அவர்களால் முன்வைக்கப்பட்ட தீர்மானம் மாநிலச் சட்டமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.