தமிழ்நாடு அரசின் நிலையான நிலப் பயன்பாட்டுக் கொள்கை வரைவு
மாநில அரசானது, 2004 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிலப் பயன்பாட்டுக் கொள்கையின் வரைவினை வகுத்த இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, மாநிலத் திட்ட ஆணையமானது (SPC) தமிழ்நாடு நிலையான நிலப் பயன்பாட்டுக் கொள்கை வரைவினை (SLUP) தயாரித்துள்ளது.
மிகவும் நீண்ட கால நிலைத்தன்மை இலக்குகளுடன் கூடிய நிலப் பயன்பாட்டினைச் சீரமைப்பதன் மூலம் நகரமயமாக்கல், சுற்றுச்சூழல் வளங்காப்பு மற்றும் பெரும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒரு நிலத்தை மேம்பாட்டு, வளங்காப்பு, வேளாண்மை மற்றும் மாறுதல் மண்டலங்களாக மாற்றுவதற்காக என, நகர்ப்புற வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும், சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கும், வேளாண்மையினை மிகவும் நன்கு ஆதரிப்பதற்கும், மேம்பாட்டினைக் கட்டுப்படுத்துவதற்கும் இது முன்மொழிகிறது. ஒருங்கிணைக்கப்பட்ட இடஞ்சார்ந்தத் திட்டமிடல், வள மேலாண்மையில் நிலையான நடைமுறைகள் மற்றும் நீடித்த நிலையான மேம்பாட்டு இலக்குகளுடன் (SDGs) நன்கு ஒருங்கிணைத்தல் ஆகியவற்றையும் இந்தக் கொள்கை வலியுறுத்துகிறது.
2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேலைவாய்ப்புக் கொள்கை, தண்ணீர்க் கொள்கை மற்றும் தெரு நாய் மேலாண்மை மற்றும் ஒழுங்குமுறைக் கொள்கை ஆகியவையும் ஆணையத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட மற்ற மூன்று கொள்கைகளாகும்.