Published on Dec 23, 2024
Current Affairs
தமிழ்நாட்டில் மின் தேவையின் அதிகரிப்பு
தமிழ்நாட்டில் மின் தேவையின் அதிகரிப்பு
  • 660-மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட எண்ணூர் அனல் மின் நிலைய (ETPS) விரிவாக்கத் திட்டம் ஆனது மின் விநியோகக் கட்டமைப்பின் மீது நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும், மின் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவும்.  மாநிலத்தின் மின் தேவை ஒவ்வோர் ஆண்டும் 10% அதிகரித்து வருகிறது.
  • 11,000 மெகாவாட் என்ற காற்றாலை ஆற்றல் உற்பத்தி திறனுடன், தமிழ்நாடு மாநிலம் நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் உள்ளது. சூரிய ஆற்றல் உற்பத்தி திறன் அடிப்படையில், 9,400 மெகாவாட் திறனுடன் மாநிலம் மூன்றாவது இடத்தில் உள்ளது. 2030 ஆம் ஆண்டிற்குள் 100 பில்லியன் அலகுகள் அளவிலான கூடுதல் பசுமை ஆற்றல் திறனை உற்பத்தி செய்வதற்கு மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. 2030 ஆம் ஆண்டிற்குள் மாநிலத்தின் எரிசக்தித் தேவையில் 50 சதவீதமானது, பசுமை எரிசக்தி மூலம் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
  • தமிழ்நாடு பசுமை ஆற்றல் நிறுவனம் லிமிடெட் ஆனது மாநிலத்தின் பசுமை ஆற்றல் உற்பத்தி முன்னெடுப்புகளை மேற்பார்வை செய்து வருகிறது.