Published on Jul 17, 2024
Current Affairs
தமிழ்நாட்டில் உள்ள கழுகுகள் குறித்த ஆய்வு 2024
தமிழ்நாட்டில் உள்ள கழுகுகள் குறித்த ஆய்வு 2024
  • முதுமலை (MTR) மற்றும் சத்தியமங்கலம் புலிகள் வளங்காப்பகங்களில் (STR) உயிரினங்களின் முக்கிய வாழ்விடங்களில் கழுகு வளங்காப்பு குறித்த விழிப்புணர்வு மீதான ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது.
  • இந்தப் பகுதியில் வாழும் சமூகங்கள் கால்நடைகளை வளர்ப்பதில் "கழுகுக்கு பாதகம் விளைவிக்காத நடைமுறைகள் குறித்தும் இந்தப் பகுதியில் இந்தப் பறவைகள் இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தினையும் இன்னும் முழுமையாக உணரவில்லை.
  • மொத்தமுள்ள நான்கு கழுகு இனங்களில் வெண்முதுகுக் கழுகு, நீண்ட அலகு கொண்ட கழுகு மற்றும் ஆசிய ராசாளிக் கழுகு ஆகிய மூன்று கழுகு இனங்கள் இந்தப் பகுதியில் காணப் படுகின்றன என்பதோடு இந்த இரண்டு வளங்காப்பகங்களுக்குள் அவை கூடு கட்டி இனப்பெருக்கம் செய்யும் இனங்களாகும்.
  • எகிப்தியக் கழுகு ஒரு வலசை போகும் கழுகு இனம் என்று நம்பப் படுகிறது.
  • ஸ்டீராய்டு சாராத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் (NSAID) கிடைக்கப் பெறுவது என்பதுகழுகுகளுக்கு தீங்கு விளைவிப்பதாக உள்ளது.
  • கீட்டோபுரோஃபென், அசெக்ளோஃபெனாக் மற்றும் நைம்சுலைடு போன்ற கழுகுகளுக்கு தீங்கு விளைவிக்கும் பிற NSAID மருந்துகள் கால்நடை மருந்தகங்களில் இன்னும் கிடைக்கப் பெறுகின்றன.