Published on Aug 19, 2024
Current Affairs
தமிழக அரசின் விருதுகள் 2024
தமிழக அரசின் விருதுகள் 2024
  • 2024 ஆம் ஆண்டிற்கான நல்லாட்சி விருதுகள், புலனாய்வுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கான முதலமைச்சரின் காவல்துறை பதக்கம் மற்றும் பொதுச் சேவையில் சிறந்து விளங்குவோருக்கான முதல்வரின் காவல்துறை பதக்கம் ஆகிய விருதுகளை வென்றவர்களின் பட்டியலினைத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
  • அரசு ஒரு புதுமையான முன்னெடுப்புகளுக்கான சான்றிதழ்களைப் பெறுபவர்களின் பட்டியலினையும் அறிவித்தது.
  • பின்வரும் ஆறு அதிகாரிகள் நல்லாட்சி விருதுகளைப் பெற்றுள்ளனர்.
  • J.இன்னசென்ட் திவ்யா, S.திவ்யதர்ஷினி, V.P.ஜெயசீலன், இளம்பஹவத், N.கோபால கிருஷ்ணன் மற்றும் D.வனிதா ஆகியோர் ஆவர்.
  • புலனாய்வுத் துறையில் சிறப்பான பங்கினை ஆற்றியதற்காக வேண்டி 10 காவல்துறை அதிகாரிகள் முதலமைச்சரின் காவல் துறைப் பதக்கத்தைப் பெற உள்ளனர்.
  • காவல் துறை துணைக் கண்காணிப்பாளர்கள் N.சுரேஷ், S.சௌமியா மற்றும் 5.புகழேந்தி கணேஷ்; காவல் துறை ஆய்வாளர்கள் K.புனிதா, D.வினோத்குமார், 1.சொர்ணவள்ளி, N.பார்வதி, P.ராதா, R.தெய்வராணி, A.அன்பரசி ஆகியோர் ஆவர்.
  • தலைமைக் காவல் ஆய்வாளர் T.S. அன்பு, காவல் துறை கண்காணிப்பாளர் E.கார்த்திக் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் C.R. பூபதிராஜன், காவல் துறை ஆய்வாளர் K.சீனிவாசன், P.V. முபைதுல்லா பொதுச் சேவையில் சிறந்து விளங்கியதற்காக முதல் அமைச்சரின் காவல் துறைப் பதக்கத்தைப் பெற உள்ளார்.
  •  மூன்று அதிகாரிகள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் D.ஜகந்நாதன் மற்றும் P.மதுசூதன் மற்றும் ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி R.சுதன் ரெட்டி ஆகியோர் இந்த ஆண்டிற்கான புதுமையான முயற்சிகளுக்கான சான்றிதழ்களைப் பெற உள்ளனர்.