Published on Jun 22, 2024
Current Affairs
தமிழகத்தில் அருகி வரும் எட்டு தாவர இனங்கள்
தமிழகத்தில் அருகி வரும் எட்டு தாவர இனங்கள்
  • அருகி வரும் மற்றும் அரிய தாவரங்களைப் பாதுகாப்பதற்கான தமிழ்நாடு அரசின் திட்டமானது எளிதில் பாதிக்கப்படக்கூடிய, அருகி வரும் மற்றும் மிகவும் அருகி வரும் இனங்கள் நிலைகளில் உள்ள எட்டு வகையான அரிய தாவரங்களை பட்டியலிட்டு உள்ளது. இந்த எட்டு தாவரங்களும் 25 அரிய தாவரங்களின் பட்டியலில் இருந்து பட்டியலிடப் பட்டுள்ளன.
  • இந்த எட்டு இனங்களும் 'பாதுகாப்பு நிலையில் முன்னுரிமை பெற்ற இனங்கள்' என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • சேலத்தில் உள்ள சேர்வராயன் மலைப்பகுதியில் காணப்படும் வெர்னோனியா ஷெவரோயென்சிஸ் மிகவும் அருகி வரும் நிலையில் உள்ள மர இனமாகும்.
  • ஏற்காட்டில் உள்ள இந்தியத் தாவரவியல் ஆய்வுத் துறையின் தாவரவியல் பூங்காவில் வெர்னோனியா ஷெவரோயென்சிஸ் மரம் ஒன்று இருந்தது.
  • கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆனைமலை மலைப் பகுதிகளிலும், வால்பாறை பீட பூமியின் சில இடங்களிலும் காணப்படும் பைலாந்தஸ் அனமலையானஸ் என்பவை மிகவும் அருகி வரும் நிலையில் உள்ள இனமாகும்.
  • ஆனைமலை புலிகள் வளங்காப்பகத்தில் காணப்படும் டிப்டெரோகார்பஸ் போர்டில்லோனி மற்றும் கொடைக்கானலில் உள்ள பழனி மலையின் வட்டக்கனல் சோலைக் காடுகளில் காணப்படும் எலேயோகார்பஸ் பிளாஸ்கோய் ஆகியவை அருகி வரும் நிலையில் உள்ள பிற தாவர இனங்கள் ஆகும்.