Published on Nov 11, 2024
Current Affairs
தமிழகத்திற்கான மின்னஞ்சல் கொள்கை
தமிழகத்திற்கான மின்னஞ்சல் கொள்கை
  • * தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான மாநில மின்னஞ்சல் கொள்கையானது சமீபத்தில் வெளியிடப் பட்டது. மதம், சாதி மற்றும் இனத்தை இழிவுபடுத்தும் சொற்களைக் கொண்ட மின்னஞ்சல்கள் மற்றும் தேச விரோதச் செய்திகள் மற்றும் ஆபாசமான விஷயங்களைக் கொண்ட மின்னஞ்சல்களுக்கு எதிராக இது எச்சரிக்கை விடுக்கிறது.
  • * தமிழக மாநில அரசின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் சேவைகளை சுமார் 1.10 லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். தமிழ்நாடு மாநில அரசானது செயலகத்திற்குள் உள்ள செயலாளர்கள் மற்றும் பிற பயனர்களுக்கான உள் மற்றும் வெளிப்புறத் தகவல்தொடர்புகளுக்காக மின்னஞ்சல் சேவைகளை 2008 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது.