Published on Dec 19, 2024
Current Affairs
தமிழகத்தின் கடன் நிலுவைகள்
தமிழகத்தின் கடன் நிலுவைகள்
  • 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி, திறந்தநிலைச் சந்தைக் கடன்கள்.
  • மூலம் பெறப்பட்ட தமிழ்நாடு அரசின் நிலுவைக் கடன்கள் 6,00,993 கோடி ரூபாயாக உள்ளது. 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியின் இறுதியில் இந்த மாநிலத்தின் ஒட்டு மொத்த கடன்கள் நிலுவை 8,34,544 கோடி ரூபாயாக இருந்தது. 2023 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி, தமிழகத்திற்கான ஒட்டு மொத்த நிலுவைக் கடன் 7,41,498 கோடி ரூபாயாகும். வட்டியின் அடிப்படையில் மாநிலத்தின் நிலுவை 28,263.67 கோடி ரூபாயாக இருக்கும். அடுத்த 10 ஆண்டுகளில் (2023-24 முதல்) சந்தைக் கடனின் அசல் தொகைக்கான கடன் தொகை 3,75,951.97 கோடி ரூபாயாக இருக்கும். 2024-25 ஆம் ஆண்டிற்கான மாநில நிதிநிலை அறிக்கையின் படி, 2024-25 ஆம் ஆண்டில் மொத்தம் 1,55,584.48 கோடி ரூபாய் கடன் பெற்று, 49,638.82 கோடி ரூபாயை திருப்பிச் செலுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
  • இதன் விளைவாக, 2025 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியன்று நிலுவையில் உள்ள கடன் மதிப்பு 8,33,361.80 கோடி ரூபாயாக இருக்கும். இது 2024-25 ஆம் ஆண்டில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 26.41% பங்கினைக் கொண்டிருக்கும்.