Published on Dec 28, 2024
Current Affairs
தென் கொரியா - மிக அதிக வயதான சமூகம்
தென் கொரியா - மிக அதிக வயதான சமூகம்
  • தென் கொரியா தற்போது அதிகாரப்பூர்வமாக "மிக அதிக வயது கொண்ட சமூகம்" என்ற சமூகத்தின் வகைக்குள் நுழைந்துள்ளது. அதன் மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கு மக்கள் சுமார் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது வகுப்பினைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
  • அந்த நாட்டில் உள்ள 10.24 மில்லியன் மக்கள் தற்போது 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் ஆவர். இது தென் கொரியாவின் மொத்த மக்கள் தொகையான 51 மில்லியனில் சுமார் 20 சதவீதத்தைக் குறிக்கிறது. பெண்களின் எண்ணிக்கையில் 22 சதவீதம் பேர் இந்த வயதிற்குட்பட்டவர்கள் ஆவர். ஆண்களின் எண்ணிக்கையில் சுமார் 18 சதவிகிதம் பேர் இந்த வயதிற்குட்பட்டவர்கள் ஆவர்.
  • 2008 ஆம் ஆண்டில், இந்த வயது வகுப்பில் 4.94 மில்லியன் நபர்கள் இருந்தனர், மேலும், நாட்டின் மக்கள் தொகையில் 10 சதவிகிதம் ஆக இருந்தனர்.
  • 2019 ஆம் ஆண்டில் 15 சதவீதத்தைத் தாண்டியதோடு, இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இது 19.05 சதவீதத்தை எட்டியது.