Published on Dec 9, 2024
Current Affairs
தேசிய அடைவுத்திறன் கணக்கெடுப்பு 2024
தேசிய அடைவுத்திறன் கணக்கெடுப்பு 2024
  • 2024 ஆம் ஆண்டிற்கான தேசிய அடைவுத்திறன் கணக்கெடுப்பு (NAS) என்பது பள்ளி மாணவர்களின் கற்றல் தொடர்பான அடைவுகள் பற்றியப் பல்வேறு தகவல்களைப் பெறச் செய்வதற்கான ஒரு பெரிய அளவிலான மதிப்பீடாகும்.
  • பாரபட்ச அணுகுமுறைகளைத் தடுப்பதற்காகப் பள்ளிகள் மற்றும் மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக என்று இந்தக் கணக்கெடுப்பு ஆனது சில சார்பற்ற மாதிரிகளை மேற்கொண்டது. 3 ஆம் வகுப்பு மாணவர்கள், மொழி, கணிதம் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் என தலா 15 மதிப்பெண்கள் என்ற மதிப்புகளுடன், இரண்டாம் வகுப்புத் தரநிலை வரையில் வடிவமைக்கப்பட்ட சுமார் 45 பல் தெரிவு கேள்விகளுக்கு (MCQs) 90 நிமிடங்களில் பதில் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
  • 2024 ஆம் ஆண்டு NAS கணக்கெடுப்பு ஆனது 26 மொழிகளில் நடத்தப்பட உள்ளது. * தமிழகத்தில் 3, 6, 9 ஆகிய வகுப்புகளின் 5,055 பிரிவினர் தேர்வு எழுத உள்ளனர்.