Published on Aug 31, 2024
Current Affairs
தேசியப் புவி அறிவியல் விருதுகள் - 2023
தேசியப் புவி அறிவியல் விருதுகள் - 2023

* தேசியப் புவி அறிவியல் விருதுகள் (NGA) என்பது சுரங்க அமைச்சகத்தினால் நிறுவப் பட்ட மதிப்புமிக்க விருதுகள் ஆகும்.

இது புவி அறிவியல் துறையில் ஆற்றப்படும் அசாதாரணமான சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை அங்கீகரித்து கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2023 ஆம் ஆண்டிற்கான விருதுகள் ஆனது 21 புவி அறிவியலாளர்களுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது. இது 9 தனிப்பட்ட விருதுகள் மற்றும் 3 குழு விருதுகளை உள்ளடக்கிய 12 விருதுகளைக் கொண்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனைக்கான தேசியப் புவி அறிவியல் விருது ஆனது பேராசிரியர் தீரஜ் மோகன் பானர்ஜிக்கு வழங்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டு தேசிய இளம் புவி அறிவியாலாளர் விருது ஆனது டாக்டர் அசுதோஷ் பாண்டேக்கு வழங்கப்பட்டது.