Published on Dec 18, 2024
Current Affairs
தேசியக் கலாச்சார வரைபடமாக்கல் திட்டம் 2024
தேசியக் கலாச்சார வரைபடமாக்கல் திட்டம் 2024
  • கலாச்சார அமைச்சகம் ஆனது, தேசியக் கலாச்சார வரைபடமாக்கல் திட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
  •  இந்தியாவின் கலாச்சாரப் பாரம்பரியம் மற்றும் கிராமப்புறப் பொருளாதாரங்களை மீளுருவாக்கம் செய்து அதைப் புத்துயிர் பெறச் செய்வதற்கான அதன் ஒரு ஆக்கப் பூர்வமான திறன் ஆகியவற்றினை அடையாளம் கண்டு ஆவணப்படுத்துவதனை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது 6.5 லட்சம் கிராமங்களின் கலாச்சார அம்சங்களை வரைபடமாக்கி (பதிவு செய்து), கலைஞர்கள் மற்றும் கலை நடைமுறைகளின் தேசிய பதிவேட்டை உருவாக்குகிறது. இதன் மாவட்ட வாரியான விவரங்கள் ஆனது, மேரா காவ்ன் மேரி தரோஹர் (MGMD) இணையதளத்தில் கிடைக்கப் பெறும்.
  • தற்போது சுமார் 4.5 லட்சம் கிராமங்களின் தரவுகள் ஆனது MGMD இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.