Published on Sep 19, 2024
Current Affairs
சூரிய ஆற்றல் உற்பத்தி மற்றும் நுகர்வு
சூரிய ஆற்றல் உற்பத்தி மற்றும் நுகர்வு
  • தமிழ்நாட்டின் சூரிய ஆற்றல் உற்பத்தி மற்றும் நுகர்வு ஆனது சமீபத்தில் ஒரு புதிய உச்சத்தை எட்டியது.
  • சூரிய ஆற்றல் உற்பத்தியானது, 6,090 மெகாவாட்டைத் தொட்டது என்ற நிலையில். செப்டம்பர் 07 ஆம் தேதியன்று பதிவான 5,985 மெகாவாட் அளவினை இது விஞ்சியது.
  • * சூரிய ஆற்றல் நுகர்வு ஆனது 45.47 மில்லியன் அலகுகளை எட்டியது என்ற நிலையில் இது செப்டம்பர் 02 ஆம் தேதியன்று பதிவான சுமார் 43.70 மில்லியன் அலகுகள் என்ற முந்தைய அதிகபட்ச பதிவினை விஞ்சியுள்ளது.
  • * தமிழ்நாடு மாநிலமானது 7,800 மெகாவாட்டிற்கு மேலான நிறுவப்பட்ட சூரிய ஆற்றல் உற்பத்தித் திறனைக் கொண்டுள்ளது.
  • * இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இதுவரையில், மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட மொத்த சூரிய மின்னாற்றல் உற்பத்தி 521.73 மில்லியன் அலகாக இருந்தது.
  •  மாநிலத்தின் தற்போதைய உச்ச கட்ட மின் தேவை சுமார் 18,115 மெகாவாட் மற்றும் தினசரி நுகர்வு சுமார் 400 மில்லியன் அலகுகள் ஆகும்.
  • 2024-25 ஆம் ஆண்டில் இதுவரையில் பதிவான அதிகபட்ச மின் தேவை 20,830 மெகா வாட் ஆகும். அதிகபட்ச தினசரி நுகர்வு 454.320 மில்லியன் அலகுகள் ஆகும்.