Published on Jul 1, 2024
Current Affairs
சென்னைப் பெருநகர நீர் வழங்கீடு மற்றும் கழிவுநீரகற்றல் சட்டம் -1978
சென்னைப் பெருநகர நீர் வழங்கீடு மற்றும் கழிவுநீரகற்றல் சட்டம் -1978
  • 1978 ஆம் ஆண்டு சென்னைப் பெருநகர நீர் வழங்கீடு மற்றும் கழிவுநீர்ச் சட்டத்தினை (தமிழ்நாடு சட்டம் 28, 1978) திருத்தியமைப்பதற்கான மசோதாவை தமிழ்நாடு சட்ட மன்றம் நிறைவேற்றியுள்ளது.வழிகாட்டுதலுக்கான தமிழ்நாடு முகமை என்ற அமைப்பு பரிந்துரைத்தபடி, சிறு குற்றங்களை குற்றமற்றதாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கீடு மற்றும் கழிவுநீர் வாரியத்தின் சாக்கடை 30 மீட்டருக்குள் இருக்கும் நிலையில் உள்ள ஒரு தனியார் தெருவில் அமைந்துள்ள ஒரு வளாகத்தின் உரிமையாளர் அல்லது குடியிருப்பாளர் சாக்கடை இணைப்பு பெறுவதை இந்தச் சட்டம் கட்டாயமாக்குகிறது.
  • 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் ஆனது, மக்கள் தொகை மூன்று லட்சத்துக்குக் குறையாமலும், ஆண்டு வருமானம் "முப்பது கோடி ரூபாய்க்குக் குறையாமலும் இருக்கும் எந்தப் பகுதியும் மாநகராட்சியாக அமைக்கப் படலாம் என்று கூறுகிறது.