Published on Sep 15, 2024
Current Affairs
சுகாதார நலனில் மாறுதல்கள் குறித்த அறிக்கை 2022-23
சுகாதார நலனில் மாறுதல்கள் குறித்த அறிக்கை 2022-23
  • கிராமப்புற இந்தியா முழுவதும் உள்ள பொது சுகாதார மையங்களில் (CHCs) சிறப்பு மருத்துவர்களுக்கான பற்றாக்குறையானது சுமார் 80 சதவீதமாக உள்ளது.
  • நாட்டில் சுமார் 1 லட்சத்து 69 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை சுகாதார மையங்கள், தோராயமாக 32,000 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 6,359 பொது சுகாதார மையங்கள் உள்ளன. கூடுதலாக, 1,340 துணைப் பிரிவு மற்றும் மாவட்ட மருத்துவமனைகள், 714 மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் 362 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
  • 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் CHCகளில் இருக்க வேண்டிய 21,964 நிபுணர்களில் 4,413 சிறப்பு மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர், அதாவது 17,551 அல்லது 79.9 சதவீதம் பற்றாக்குறை உள்ளது. நாட்டின் 757 மாவட்டங்களில் 5,491 கிராமப்புற CHCகள் உள்ளன.
  • * நகர்ப்புறங்களில் உள்ள 868 CHC மையங்களில் உள்ள நிபுணர்களின் இருப்பு சுமார் 56 சதவீதத்துடன் சற்று சிறப்பான அளவிலேயே இருந்தது.
  • * நாட்டில் உள்ள 714 மாவட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 33,964 என்ற மொத்த எண்ணிக்கையில் 27,304 மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர். இதில் சுமார் 20 சதவீத இடங்கள் காலியாக உள்ளன.
  • * இந்தியாவின் மருத்துவர்-மக்கள் தொகை விகிதம் ஆனது தற்போது உலக சுகாதார அமைப்பினால் பரிந்துரைக்கப்பட்ட 1000 மக்கள்தொகைக்கு 1 மருத்துவர் என்ற விகிதத்தை விட அதிகமாக 1:836 என்ற அளவில் உள்ளது.